உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத உற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 5.30 மணிக்கு நித்ய பூஜை, 7 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீஸ்வரர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் 1 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவமும் கோவில் ஜீயர் மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜி.ஆர். ஸ்ரீதேவி சேர ராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் கோவில் ஏஜென்டு கோலாகலன் தலைமையில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story