தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை


தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM (Updated: 11 Nov 2022 6:46 PM)
t-max-icont-min-icon

தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை நேற்று நடைபெற்றது. அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.


Next Story