பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் வன் புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆடி மாத பிறப்பையொட்டி இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது வன்புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மேள தாளம் முழங்க பெருமாள் வீதி உலா காட்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை ஆதீன கர்த்தர்கள் செய்திருந்தனர். இதேபோல் திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் செய்திருந்தார்.


Next Story