நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த சிறப்பு இயக்கம் தொடக்க விழா
வாணாபுரம் ஊராட்சியில் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த சிறப்பு இயக்கம் தொடக்க விழா
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாணாபுரம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பருவமழைக்கு முன் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கம் அடுத்த மாதம்(ஜூன்) 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான தொடக்க விழாவுக்கு வாணாபுரம் ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் தலைமை தாங்கினார். துணை தலைவர் வசந்தி ராஜா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story