மாரத்தான் போட்டியையொட்டி, சென்னையில் அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை
மெட்ரோ ரெயில் குறியீடு அட்டையை பயன்படுத்தி இருமுறை கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களின் வசதிக்காக இன்று அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மெட்ரோ ரெயில் குறியீடு அட்டையை பயன்படுத்தி இருமுறை கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சைதை, சின்னமலை, கிண்டி, பரங்கிமலை, சென்னை செண்ட்ரல், விமான நிலையத்தில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மாரத்தானில் பங்கேற்போர் நாளை அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story