91 பள்ளிகளில் மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம்; இன்று நடக்கிறது


91 பள்ளிகளில் மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம்; இன்று நடக்கிறது
x

91 பள்ளிகளில் மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 49 அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் 42 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என 91 பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இக்கூட்டத்தில், பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ள நிலையில் உடனடித் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்தல், அரசு பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் சேர்தல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் தொடர்பான கருத்துகள் விவாதிக்கப்பட உள்ளது. எனவே தேர்வில் தோல்வியுற்று உடனடி தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், தேர்ச்சி பெற்று இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story