சிறப்பு மருத்துவ முகாம்
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சி ஒன்றிய கட்டிட வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சித் தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சளி பரிசோதனை, பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ஊனம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 320-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், முருகமணி, வடவீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஜம்புகென்னடி, சுகாதார மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.