ஒரக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


ஒரக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் இருளர் இன பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்

அதன்படி பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் ஆலோசனையின் பேரில், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய ஒரக்காடு ஊராட்சியில் உள்ள அல்லிமேடு இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அன்பு செல்வன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இருளர் இன சாதி சான்றிதழ்கள், வட்ட வழங்கல் பிரிவு ரேஷன் அட்டை, நலவாரிய அட்டை கோரிக்கை, புதிய ஆதார் அட்டை, ஆதார் திருத்தம் செய்தல் என மொத்தம் 106 மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, துணைத் தலைவர் லட்சுமணன், ஊராட்சி செயலாளர் சரளா, உதவியாளர் மஞ்சுளா, மக்கள் நலப்பணியாளர் திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அல்லிமேடு இருளர் காலனியில் மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் நிலாசுரேஷ் நட்டார்.


Next Story