சிறப்பு கிராம சபை கூட்டம்
நட்டாத்தி பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
நட்டாத்தி பஞ்சாயத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டமிடுதல் மற்றும் அங்கீகரித்தல் குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதா கலா தலைமை தாங்கினார். துணை தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பஞ்சாயத்தில் செய்ய வேண்டிய பணிகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகாயராணி கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், பிரியா, ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story