சிறப்பு கிராமசபை கூட்டம்


சிறப்பு கிராமசபை கூட்டம்
x

நெமிலி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கீழாந்துறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு கீழாந்துறை பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மின்னல் ஒளி அம்பேத்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று நெடும்புலியில் தலைவர் மாறன் தலைமையிலும், காட்டுப்பாக்கத்தில் தலைவர் தணிகாசலம் தலைமையிலும், வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கீழ்கண்ட ஊராட்சிகளில் அதன்தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

உளியநல்லூர்- ஜீவா சதாசிவம், கீழ்வெங்கடாபுரம்- அம்மு தட்சணாமூர்த்தி, அகவலம்- ஆஷா மார்க்கன்டேயன், பெரப்பேரி- கலைவாணி மகாலிங்கம், கீழ்வீதி- ஆனந்தி செல்வம், ஜாகீர்தண்டலம்- கன்னியம்மாள் பழனி, திருமால்பூர்- துலுக்கானம், வேளியநல்லூர்- அமுதா சண்முகம், கணபதிபுரம்- லோகநாதன், நாகவேடு ஆனந்தி பாலசுப்பிரமணியன், ஆட்டுப்பாக்கம் -நித்தியா ராமதாஸ், பரமேஸ்வரமங்கலம்- கவிதா சங்கர், செல்வமந்தை- ஆறுமுகம், இலுப்பை தண்டலம்- அனுசுயா மகாலிங்கம், மேலேரி- மனோகரன், கீழ்வெண்பாக்கம் (பொறுப்பு) சிலம்பரசன், ஒச்சலம்- கோபாலகிருஷ்ணன், கீழ்களத்தூர்- குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.


Next Story