மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம்


மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:30 AM IST (Updated: 3 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே சிவசைலத்தில் மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

கடையம் வட்டாரம் சிவசைலம் கிராமத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை மணலி மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கடையம் வட்டாரம் இணைந்து மண் மாதிரி சேகரிப்பு சிறப்பு முகாமை நடத்தியது.

கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கி முகாைம தொடங்கி வைத்து மண் ஆய்வு செய்து நிலத்திற்கு உரம் இடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்து கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன், மதராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவன துணை மேலாளர் கோவிந்தராசு, கடனா-அரசபத்து நீர்ப்பாசன கமிட்டி தலைவர் கண்ணன், முன்னோடி விவசாயி சங்கரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முகமது இஸ்மாயில் செய்திருந்தார்.


Next Story