வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

வேலூர் மாவட்டத்தில்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 651 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. ஏராளமானவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர். 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 27-ந் தேதி நடந்த முகாமுக்கு பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சென்று பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர்.

கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 4,370 பேரும், 13-ந் தேதி நடந்த முகாமில் 5,884 பேரும் விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் நடந்த முகாமில் பெயர் சேர்த்தலுக்கு 1,016 பேரும், நீக்கம் செய்ய 197 பேரும், திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தலுக்கு 731 பேரும் என மொத்தம் 2,944 பேர் விண்ணப்பித்திருந்ததாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story