விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
நெடுங்குணத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் சேத்துப்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் 27 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
நெடுங்குணம் கிராமத்தில் ராமச்சந்திர பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமுக்கு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கினார்
முன்னாள் தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணகி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, விரிவாக்க மையம் இயக்குனர் மதன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, தொழில்நுட்ப ஆலோசனை, விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த நிர்வாகம், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
பின்னர் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற எழுத்தர் ராஜேந்திரன் கூறினார்.