வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்


வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்
x

வாணியம்பாடியில் வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார்.

முகாமில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர் கலந்து கொண்டு கடன் வழங்கக் கோரி மனுக்களை அதிகாரிகளிடம் நேரில் அளித்தனர்.

வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்காததால் குறைந்த அளவு பொதுமக்களே கலந்து கொண்டு மனு அளித்தனர்.


Next Story