விடுமுறை நாட்கள், அமாவாசையை முன்னிட்டுசேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள்இன்று முதல் இயக்கம்


விடுமுறை நாட்கள், அமாவாசையை முன்னிட்டுசேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள்இன்று முதல் இயக்கம்
x

விடுமுறை நாட்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சேலம்

சேலம்

விடுமுறை நாட்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சேலம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து தினமும் 1,900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் கோட்டம் சார்பில் வார இறுதிநாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் நிலையம், சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

முன்பதிவு செய்யலாம்

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், அங்கிருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி மற்றும் கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் மற்றும் செயலி வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அமாவாசை

இதேபோல் அமாவாசையை முன்னிட்டு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சித்தர் கோவிலுக்கும், புதிய பஸ் நிலையம், மேட்டூர், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் அனைவரும் பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story