நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x

கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது.நடராஜர் தலமான இங்கு சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரமான நேற்று மாலை 6 மணிக்கு இவ்வாண்டின் முதல் மகா அபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. நடராஜருக்கு திரவியம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், இளநீர்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் சதாசிவ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story