நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். மேலும் தினசரி பூஜைகள் முக்கிய திருவிழாக்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்துவது வழக்கம். நேற்று முன்தினம் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story