கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு



தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
சென்னை,
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார். 20-ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21-ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
#BREAKING || பேரவை கூட்டத்தொடர் - ஆளுநருக்கு அழைப்பு
— Thanthi TV (@ThanthiTV) February 2, 2024
பிப்ரவரி 12ம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர்
கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்#ThanthiTV #RNRavi #Appavu pic.twitter.com/KKOrh6IAzx
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire