ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பு


ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பு
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே ஏரிக்கரையில் பனை விதைகள் விதைக்கப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-24-ம் ஆண்டின் கீழ் 2300 பனை விதைகள் நடவு செய்ய தோட்டக்கலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகள், ஊராட்சிக்கு 100 பனை விதைகள் வீதம் வழங்கப்படுகிறது. அதன் படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் கிராம வளர்ச்சிக்கு நடவு செய்ய ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பனிடம் 100 பனை விதைகள் வழங்கப்பட்டது. இந்த பனை விதைகள் கொட்டியாம்பூண்டி ஏரிக்கரையில் விதைக்கப்பட்டது. இதனை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் பார்வையிட்டார். மேலும் அவர், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


Next Story