1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி
1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே குளத்தூரில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பனை விதைகளை விதைத்து, சுற்று வட்டார பகுதிகளில் 1 லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பனை சார்ந்த உணவு பொருள்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
குளத்தூர் பஞ்சாயத்து தலைவர் மாலதி, துணைத்தலைவர் மாரிச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராஜ், செந்தூர் பாண்டியன், பனைத்தொழிலாளர் சங்க தலைவர் அரிபாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், கிளை செயலாளர்கள் பேச்சிமுத்து, ராஜபாண்டி, லெனின், கெங்குமணி, வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, வேளாண்மை உதவி அலுவலர் கவுதமி, குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகே முத்துகுமராபுரத்தில் ரூ.13 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, கச்சேரிதளவாய்புரத்தில் ரூ.6 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். யூனியன் தலைவர் ரமேஷ், ஆணையாளர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், உதவி பொறியாளர் காயத்ரி, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், சண்முகையா, ராமசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.