பனை விதைகள் விதைக்கும் பணி


பனை விதைகள் விதைக்கும் பணி
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே பனை விதைகள் விதைக்கும் பணி

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரதாபராமபுரம் ஊராட்சி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் கீழ்வேளூர் நாகை மாலி எம்.எல்.ஏ. தலைமையில் பனை விதைகள் விதைக்கும் பணி நடந்தது. அதேபோல் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளிலும் பனை விதைகள் விதைக்கும் பணி நடந்தது. இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மோகனசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யாஇளம்பருதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, கீழையூர் ஒன்றியக்குழு துணைதலைவர் சவுரிராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.


Next Story