நீலகிரியில் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை...!


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது உள்ளது.

நீலகிரி


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் முறை தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல் மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இன்று காலை முதல் நன்றாக வெயில் அடித்த நிலையில், மதியம் 12 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன், மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. இதையடுத்து மதியம் ஒரு மணி முதல் 3 மணி நேரம் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் பஸ்நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் வழி, லவ்டேல் சந்திப்பு உள்படப் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.


Next Story