'தென் இந்தியா பாரத கலாசாரத்தின் கோட்டை' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்


தென் இந்தியா பாரத கலாசாரத்தின் கோட்டை - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்
x
தினத்தந்தி 17 Dec 2023 7:23 AM IST (Updated: 17 Dec 2023 7:31 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் தேசியவாதம் பற்றிய புரிதல் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் கூட்டரங்கில் பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தென் இந்தியாவை பாரத கலாசாரத்தின் கோட்டை என தெரிவித்தார். மேலும் காசிக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்காக தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலை பாண்டியர்கள் கட்டினர் என்று கூறினார்.

சிலர் இந்தியா ஒரு தேசம் அல்ல, தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தை பரப்புகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இதனால் தேசியவாதம் பற்றிய புரிதல் இல்லாத சூழல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.


Next Story