சிறுவனிடம் தவறாக நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை


சிறுவனிடம் தவறாக நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை
x

சிறுவனிடம் தவறாக நடந்துகொண்ட தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

சிறுவனிடம் தவறாக நடந்துகொண்ட தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கசமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 40), தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டார்.

இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

14 ஆண்டு சிறை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி அன்புச்செல்வி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.


Next Story