சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு


சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு
x

காரைக்குடியில் 25 ஏக்கரில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் 25 ஏக்கரில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

நகர்மன்ற கூட்டம்

காரைக்குடி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முத்துத் துரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஆணை யாளர் லெட்சுமணன் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- கார்த்திகேயன், எனது வார்டில் குரங்குகளின்தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவைகளை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும். மைக்கேல்ராஜ்: எனது பகுதியில் உள்ள குளத்தில் இறைச்சிக் கடைக்காரர்கள் இறைச்சி கழிவுகளை குளத்தினுள் கொட்டுகின்றனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

நோட்டீஸ்

மெய்யர்: தேவகோட்டை நகர் பகுதி குப்பைகள் காரைக்குடி நகராட்சி பகுதிக்கான குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.

.தலைவர்:மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும். பசும்பொன் மனோகரன்: பேரறிவாளன் விடுதலைக்கு முயற்சித்த முதல்-அமைச்சருக்கும் விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மெய்யர்:குற்றவாளியை விடுதலை செய்து அவரது விடுதலைக்கு மன்றத்தில் நன்றியும் தெரிவிப்பதை எதிர்க்கிறேன் என்றார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் மெய்யருக்கு எதிராக குரல் எழுப்பியதால் எதிர்ப்பு தெரிவித்து மெய்யர் வெளிநடப்பு செய்தார்.

சூரியஒளி மின்சாரம்

தலைவர்: சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமுதா: நகரத்தில் நகரத்தாரின் பிரமாண்டமான வீடுகள் உள்ளது. தற்போது அதனை பராமரிக்க கூட முடியாத நிலையில் பலரும் உள்ளனர். புதியவரி விதிப்பு சதுர அடியில் கணக்கீடு செய்யும்போது அவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்க நேரிடும். எனவே இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆணையாளர் லெட்சுமணன்: அதிக பரப்பளவு உள்ள வீடுகள் சதுர அடிப்படி கணக்கிடு செய்யப்பட்டாலும் அது கட்டப்பட்ட காலத்தையும் கணக்கீடு செய்து அதற்கான வரி குறைப்பை செய்த பிறகே வரி நிர்ணயம் செய்யப்படும்.

தலைவர்: மாவட்டத்தின் பெரிய நகரமான காரைக்குடியில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் தான் உள்ளனர். இதில் நிலைய எழுத்தர் பணி, விடுமுறையில் சென்றவர்கள், கோர்ட்டு உள்ளிட்ட பிற பணிகளுக்காக சென்றவர்கள் போக ஒரு சிலரே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ளனர். இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன.

தீர்மானம்

எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அதில் இருக்க வேண்டிய எண்ணிக்கையான 25 போலீசாரை உடனடியாக நிரப்ப வேண்டுகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது. பின்னர் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.


Next Story