இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல்


இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல்
x

இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தா.பழூர் ஒன்றியம் சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்களும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், செந்துறை ஒன்றியம் துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் செந்துறை ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பு மனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.


Next Story