பனிப்பொழி: கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


பனிப்பொழி: கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

பனிப்பொழிவின் காரணமாக கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கரூர்

பூ மார்க்கெட்

கரூர் ரெயில்வே ஜங்சன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், மலைப்பட்டி, கருப்பூர், லந்தக்கோட்டை, செக்கணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பனிப்பொழிவின் காரணமாக கரூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மல்லிகை பூ, முல்லை பூ உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

பூக்கள் விலை விவரம்

ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.2,000-க்கும், முல்லை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரைக்கும், ஜாதிப்பூ ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும், ரோஜாப்பூ ரூ.100 முதல் ரூ.150-க்கும், செவந்தி பூ ரூ.150 முதல் 180-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், துளசி 4 கட்டு ரூ.70-க்கும், மருவு 4 கட்டு ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் வியாபாரிகள் உள்ளிட்டோர் இங்கிருந்து பூக்களை வாங்கி சென்று கோர்த்து விற்கும் போது அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கலாம் எனவும், தற்போது பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்து உள்ளது எனவும், இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story