மொபட்டில் மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மொபட்டில் மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள தோப்பு பாளையம் எம்.பி.என்.புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கவின் குமார் (வயது 23). இவரும், அவரது தாய் சாந்தியும் நேற்று முன்தினம் இரவு சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் 2 பேரும் ஓட்ட பாறை பிரிவு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிப்பதற்காக இழுத்துள்ளார்.
இதில் சுதாரித்துக்கொண்ட சாந்தி தனது கழுத்தில் இருந்த சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் மொபட் நிலை தடுமாறியதால் கவின்குமாரும், சாந்தியும் கீழே விழுந்துள்ளனர். இதில் சாந்தியின் கழுத்தில் இருந்த 1½ பவுன் அளவுள்ள சங்கிலி மட்டும் மர்மநபரின் கையில் சிக்கியது. மீதி 1½ பவுன் தங்க சங்கிலி சாந்தி கையில் இருந்தது. இதுகுறித்து கவின் குமார் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.