பெருந்துறையில், மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு; மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

பெருந்துறையில், மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு; மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
x

பெருந்துறையில் மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு தப்பிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு தப்பிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மர்மநபர்கள் 2 பேர்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி மாரியம்மாள். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி ரோடு கந்தாம்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

மாரியம்மாள் நேற்று முன்தினம் மாலை தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்தபடி மர்மநபர்கள் 2 பேர் வந்து இறங்கினர்.

நகை பறிப்பு

பின்னர் 2 பேரும் கடைக்கு சென்று மாரியம்மாளிடம் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், இதோ தருகிறேன் என்று கூறிவிட்டு திரும்பினார். அப்போது அதில் ஒருவன் திடீரென, மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை பறித்தார். பின்னர் 2 பேரும் அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து மாரியம்மாள் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story