வத்தலக்குண்டுவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
வத்தலக்குண்டுவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு பிலீஸ்புரத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவர் இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக சமையலறைக்கு சென்றார். அப்போது அங்கு கியாஸ் சிலிண்டரின் அருகில் சாரைப்பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேறி பாம்பு... பாம்பு... என்று அபயகுரல் எழுப்பினார். உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வீட்டுக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story