5 டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது


5 டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
x

காவல்கிணறு பகுதியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காவல்கிணறு பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்ததில், மொத்தம் 5 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அரிசியுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் தரிசுபுத்தன்வீடு பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை பேட்டையை சேர்ந்த பாலா, சாமுவேல், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த ரஞ்சித், கேரளாவை சேர்ந்த அன்வர் ஆகியோரை தேடி வருகிறார்கள். இதேபோல் ஒரு லாரியில் 1,400 லிட்டர் மண்எண்ணெய் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு லாரியும், மண்எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேய்க்குளம் கட்டாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story