பொள்ளாச்சி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; டிரைவர் கைது


பொள்ளாச்சி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; டிரைவர் கைது
x

பொள்ளாச்சி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு மாக்கினாம்பட்டி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மாக்கினாம்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காருக்குள் 35 கிலோ எடை கொண்ட 12 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காருடன் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story