பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி
பணகுடி:
பணகுடி புஷ்பவனம் புனித தெரசாள் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சகாயபுஷ்பராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வசந்தி வரவேற்றார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாஸ்கர், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட தண்டையார்குளம் எஸ்.ஏ. தொடக்கப்பள்ளி, சிவகாமிபுரம் அழகு இந்து தொடக்கப்பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story