சாலையோர கடைகளை அகற்றக் கூடாது சிறுகடை வியாபாரிகள் வலியுறுத்தல்


சாலையோர கடைகளை அகற்றக் கூடாது சிறுகடை வியாபாரிகள் வலியுறுத்தல்
x

கோப்புப் படம் 

சாலையோர சிறுகடை வியாபாரிகள் தேசிய கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் வீ.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சென்னை,

சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய சட்டமான சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2014-ல் குறிப்பிட்டுள்ளபடி நகர வியாபாரக் குழுவிற்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். நகர வியாபாரக் குழுவின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு சாலையோர வியாபாரக் கடைகளை அகற்றக் கூடாது. அனைத்துப் பகுதிகளிலும் நகர வியாபாரக்குழு அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தின் உள்ளும், வெளியும், சுற்றுப்பகுதிகளிலும் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளுக்கு கோயம்பேடு மொத்த வணிக சந்தைக்கான சட்டத்தை தளர்த்தி, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலேயே இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெரினா கடற்கரையில், கடந்த 2017-ல் கணக்கெடுக்கப்பட்டு மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்ட 1,544 பேருக்கும் அவர்கள் ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே தொடர்ந்து வியாபாரம் செய்யும் வகையில் ஒழுங்குபடுத்தித்தர வேண்டும்.

சாலையோர வியாபாரிகள் உரிமையையும், நலனையும் பாதிக்கின்ற வகையில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்புகளின் மீது சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும், நலனையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story