குட்டையில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு


குட்டையில் தவறி விழுந்த  பசு மாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2022 1:00 AM IST (Updated: 13 Dec 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

பசு மாடு உயிருடன் மீட்பு

ஈரோடு

அந்தியூரை அடுத்த ஓடைமேடு மாதேஸ்வரன் கோவில் அருகே நேற்று மாலை குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகே உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க சென்ற பசு மாடு குட்டையில் தவறி விழுந்தது.

சேறு, சகதியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, கயிறு கட்டி பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.


Next Story