தர்மபுரி மாவட்டத்தில், 20 மையங்களில்தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5,656 மாணவர்கள் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில், 20 மையங்களில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5,656 மாணவர்கள் எழுதினர்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. மாவட்ட முழுவதும் 20 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 5,977 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 5,656 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 321 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 600 ஆசிரியர்கள் இந்த தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு மையத்திலும் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மையத்தின் விதிமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.