ஊட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி -தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை


ஊட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி -தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 28 July 2023 12:30 AM IST (Updated: 28 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி - தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நீலகிரி

ஊட்டி

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களை திறன் பயிற்சியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு கட்டுமான கழகம், கட்டுமான திறன் பயிற்சி நிலையம் சார்பில் 3 மாதம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எனவே பயிற்சிகளில் சேர விரும்பும் நீலகிரி மாவட்ட தொழிலாளர்கள் தங்களுடைய நல வாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story