பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கீழ வெள்ளகாலில் சுயஉதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பிரம்பினால் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்கள் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பயிற்சியை நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிப்போ நிறுவனத்தின் பொது மேலாளர் கே.பழனிவேல்முருகன் பயிற்சியிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதில் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியானது வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.