உயர் திறன் மேம்பாட்டு பயிற்சி


உயர் திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உயர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம்

தமிழக அரசின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தின் சார்பில் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள ராஜன் மருத்துவமனையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கவிழா நடைபெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை தாங்கினார். அரசு உயர் திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குனர் யோகம், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது முன்னிலை வகித்தனர். மருத்துவமனை நிர்வாக அலுவலர் நாகரெத்தினம் வரவேற்றார். பயிற்சி மையம் குறித்து உதவி இயக்குனர் யோகம், டாக்டர் ஜோசப்ராஜன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம் என்பதை கட்டாயமாக்கி வருகிறது. உலக அளவிலான தொழில்துறை வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு பணியாளர்களின் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அரசே தனியாருடன் இணைந்து இதுபோன்ற பயிற்சி மையங்களை உருவக்கி வருகிறது. தற்போது சுகாதார நலன் சார்ந்த மருத்துவ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 5 வகையான ஆயத்த பயிற்சிகள் அளிக்கப்படும். தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் கொண்ட சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் அவர்கள் உலகின் எந்த பகுதியிலும் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்றனர். இதில், பயிற்சி அலுவலர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகேந்திர பிரசாத் நன்றி கூறினார்.


Next Story