திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு


திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


ரிஷிவந்தியம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன சார்பில் ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் மே்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் ஒன்றிய குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார்.

பல்வேறு அரசு துறையின் கீழ் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற திட்டங்களில் 19 வகையான பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர்களின் தேர்வு நடந்தது. இதில் 689 பேர் கலந்து கொண்டனர். அதில் 203 பேர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தகுமாரி லிங்கநாதன், தீபா அய்யனார், பெற்றோர் ஆசிரியர் தலைவர் சீதாபதி, தலைமை ஆசிரியர் செல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story