திறன் மேம்பாட்டு பயிற்சிகள்


திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன்பேசி தொழில் நுட்பவியலாளர், உற்பத்தி ஊழியர் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

பயிற்சி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா திறன் பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் (பெண்களுக்கு) மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி (ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியினை பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.18,500 வரை பெற வழிவகையும் செய்யப்படும்.

இப்பயிற்சியினை பெறுவதற்கு, www.tahdco.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story