சிவகாசி சுற்று வட்ட சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்


சிவகாசி சுற்று வட்ட சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
x

சிவகாசி சுற்று வட்ட சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைேவற்றப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகர 6-வது பகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். விக்னேஷ் முன்னிலை வகித்தார். பால்ராஜ் வரவேற்றார். மாநகர செயலாளர் உதயசூரியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் நோக்குவது மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சியை சுற்றி உள்ள சுற்றுவட்ட சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மாநகரப்பகுதியில் விரிவுப்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க மேயர் சங்கீதா இன்பம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய 10 இடங்களில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற உலக வங்கியிடம் இருந்து ரூ.500 கோடி நிதியை பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை 6-வது பகுதி செயலாளர் சபையர் ஞானசேகரன் செய்திருந்தார்.


Next Story