நாய்களுக்கு கருத்தடை செய்ய சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் முடிவு


நாய்களுக்கு கருத்தடை செய்ய சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் முடிவு
x

நாய்களுக்கு கருத்தடை செய்ய சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திரியும் தெருநாய்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வநத்தம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



Next Story