சிவகாசி மாநகராட்சி ஊழியர் தற்காலிக பணி நீக்கம்
குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்ததாக கூறி சிவகாசி மாநகராட்சி ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் ஏராளமான வீடுகளில் முறையான அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றம் நடுவத்தில் புகார் செய்தார். நடுவத்தின் உத்தரவின் பேரில் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமயஉூர்த்தி திருத்தங்கல் பகுதியில் உள்ள வீடுகளில் கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது திருத்தங்கல் பகுதியில் குழாய் பொருத்துனர் பணி செய்து வந்த கண்ணன் என்பவர் முறையான அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் வழங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மாநகராட்சி கமிஷனர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story