சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்


சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்
x

சிவகிரி திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

தென்காசி


சிவகிரியில் 100 ஆண்டு கால பழமையும், பெருமையும் வாய்ந்தது திரவுபதி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

இந்த வருடம் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் உள்ள மூலவர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் சந்தனம், பன்னீர், பால், தயிர் இளநீர் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து புறப்பட்ட கொடி பட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

காலை7 மணி அளவில் கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு 7.15 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர், திரவுபதி, கிருஷ்ணர், அர்ச்சுனன், போன்ற சாமி உள்பட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்புகள் கட்டப்பட்டது.

பின்னர் பூக்குழி இறங்குவதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு பூசாரி காப்பு கட்டினார். இதைத்தொடர்ந்து இன்று முதல் 1-ம் திருநாள் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி வேண்டுதலை நிலைவேற்றுவர்.

பின்னர் வருகிற 15-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story