சிவகிரி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சிவகிரி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரிக்கு மேற்கே திரவுபதி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சபரிமலையாபுரம் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கும்ப பூஜை, மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, தீர்த்தம் அழைத்தல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலையில் விமான கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story