சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு


சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு
x

சிவகங்கை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு-கலெக்டர் தகவல்

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. (பண்ருட்டி தொகுதி) தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை தொகுதி), அருள் (சேலம் மேற்கு தொகுதி), கருணாநிதி (பல்லாவரம் தொகுதி), சக்கரபாணி (வானூர் தொகுதி), பழனியாண்டி (ஸ்ரீரங்கம் தொகுதி), மணி (ஓமலூர் தொகுதி), மனோகரன் (நாங்குனேரி தொகுதி), மோகன் (அண்ணா நகர் தொகுதி), ராமலிங்கம் (நாமக்கல் தொகுதி), வில்வநாதன் (ஆம்பூர் தொகுதி) ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி) ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story