குற்றாலம் அருவிக்கரைகளில் சைரன் அமைக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது சுற்றுலா பயணிகளுக்கு முன் அறிவிப்பு செய்யும் விதமாக அபாய ஒலி எழுப்பும் சைரன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது சுற்றுலா பயணிகளுக்கு முன் அறிவிப்பு செய்யும் விதமாக அபாய ஒலி எழுப்பும் சைரன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம்
தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் தென்காசியில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், கார்த்திகேயன், பிரகாஷ், வேல்முருகன், சிந்தனை செல்வன், ஜவாஹிருல்லா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், வன அலுவலர் முருகன், சட்டமன்ற குழு செயலாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி
கூட்டத்திற்கு பின்னர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களது குழு தென்காசி மாவட்டத்தில் ஆய்வு செய்தது. குற்றாலம் அருவிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளுக்கு முன் அறிவிப்பு செய்யும் விதமாக அபாய ஒலி எழுப்பும் சைரன் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் அருவிகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டது.
பத்திரப்பதிவுத்துறையில் மாநில கணக்காயர் தணிக்கை குறிப்பு முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இழப்பு குறைவு, முத்திரை தீர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இழப்பு குறைவு முத்திரை தீர்வை ரூ.22,250 வசூலிக்கப்பட்டு உள்ளது.
தீர்வு
சந்தை மதிப்பிற்கான வழிகாட்டி 2012 தெருவாரியான பதிவேட்டில் அடங்கிய குறைபாடுகள் அடுத்த வழிகாட்டி தயாரிக்கும் போது சரி செய்யப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு வரப்பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான 5 புகார் மனுகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.