பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சிக்னல் கோளாறு; மின்சார ரெயில் சேவை பாதிப்பு


பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சிக்னல் கோளாறு; மின்சார ரெயில் சேவை பாதிப்பு
x

பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்ததால் சென்னையை அடுத்த தாம்பரம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

கனமழையால் பல்லாவரம்-குரோம்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் மழைநீர் தேங்கியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ெரயில் சேவை 45 நிமிடம் பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு சரி செய்த பிறகு மீண்டும் மின்சார ரெயில் சேவை சீரானது.

இதே போல கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியது. பொதுப்பணி துறையினர் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு முன்பே கீழ்தளத்தில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் மேல் தளத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.பம்மல், முத்தமிழ் நகர், அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.


Next Story