வில்லுக்குறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை


வில்லுக்குறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை
x

வில்லுக்குறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் சித்த வைத்தியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் சித்த வைத்தியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்தார்

வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வ ஜார்ஜ் (வயது 77). சித்த வைத்தியர். இவர் ஊர், ஊராக சென்று சித்த வைத்தியம் பார்த்து வந்தார். இவருடைய மனைவி மரிய தங்கம் (72).

இந்தநிலையில் மரிய தங்கம் கடந்த மாதம் 23-ந் தேதி அன்று உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டார். மனைவி இறந்த வேதனையை செல்வ ஜார்ஜால் தாங்கி கொள்ள முடியவில்லை. 50 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் மனைவி இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை.

சித்த வைத்தியர் தற்கொலை

பின்னர் மரிய தங்கத்தின் இறுதி சடங்கு நடந்த போது இன்னொரு குழியையும் தோண்டி தயாராக வைத்திருங்கள் என செல்வ ஜார்ஜ் கூறியுள்ளார்.

மனவேதனையில் அவர் கூறுவதாக உறவினர்கள் நினைத்தனர். அதே சமயத்தில் செல்வ ஜார்ஜிடம் இருந்து ஏதோ மருந்து வாடை அடித்தது. உடனே உறவினர்கள் அவரிடம் கேட்ட போது விஷம் குடித்ததை ஒப்புக் கொண்டார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை செல்வ ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து சித்த வைத்தியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story